தமிழ் இதழாளர் தின விழா பத்திரிகையாளர்களுக்கு விருது

பெங்களூரு: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடந்த, தமிழ் இதழாளர் தின விழாவில், சிறப்பாக செயல்பட்டோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பெங்களூரு, சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, இன்ஸ்டிடியூஷன் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்சில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், தமிழ் இதழாளர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பத்திரிகை துறையில் சிறப்பாக செயல்பட்ட மதலைமணி, வில்வபதி, மதியழகன், தங்கமணி, தினகரவேலு, ராஜேந்திரபாபு ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விருதுக்கு தேர்வாகி இருந்த துளசிபட், கணேசன், நாதன், இளவழகன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் வரவில்லை.

தமிழ் பத்திரிகையில் செயற்கை நுண்ணறிவுகளால் ஏற்படும் ஆக்கபூர்வ விளைவுகள் குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. எழுத்தாளர் சொக்கன் செயற்கை நுண்ணறிவின் சாதகம், பாதகம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு திருவள்ளுவர் புகைப்படம் பொறித்த 2025ம் ஆண்டு காலண்டர் வழங்கப்பட்டது.

Advertisement