ஏரோ இந்தியா விமான கண்காட்சி 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பெங்களூரு: ஏரோ இந்தியா நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெங்களூரு எலஹங்கா விமான பயிற்சி மையத்தில், வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 'ஏரோ இந்தியா 2025' விமான கண்காட்சி நடக்க உள்ளது. ஆசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விமான கண்காட்சியை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை தருவர்.

இதற்காக வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதில் பயணம் செய்வதன் மூலம், கண்காட்சிக்கு தாமதமின்றி செல்ல முடியும். விமான கண்காட்சி டிக்கெட் வைத்திருப்போர், பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம்.

Advertisement