திருநங்கையர் வேண்டுகோள்

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் 50 பேர் பங்கேற்றனர். 'அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கவேண்டும். ஆதார் திருத்தங்களை விரைந்து செய்துகொடுக்கவேண்டும்' என, திருநங்கைகள் கோரிக்கை வைத்தனர். சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் சதீஷ், மகளிர் திட்ட உதவி அலுவலர் முனிராஜ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement