ரூ.8 கோடி நகை திருடியவர் கைது

ஹலசூரு கேட்: வேலை செய்த நகைக் கடையில் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு ஹலசூரு கேட்டில் நகைக்கடை வைத்திருப்பவர் விக்ரம். இவரது நகைக் கடையில், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த நரேஷ் சர்மா வேலை செய்தார். விக்ரம் தமிழகத்திலும் நகை விற்பனை செய்தார்.

தன் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால் நரேஷ் சர்மாவிடமும் நகைகளை விற்னை செய்து வர கொடுப்பது வழக்கம்.

கடந்த மாதம் 8ம் தேதி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான, நகைகளுடன் தமிழகத்தின் கோவைக்கு நரேஷ் சர்மா சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

நகைகளை திருடியதாக நரேஷ் மீது ஹலசூரு கேட் போலீசில், விக்ரம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷை தேடினர்.

லக்னோவில் கடந்த 5ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை பெங்களூருக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அவரிடம் இருந்து தற்போதைக்கு 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement