பட்ஜெட் குறித்து முதல்வர் ஆலோசனை
பெங்களூரு: மார்ச் முதல் வாரம், நிதி அமைச்சரும் முதல்வருமான சித்தராமையா, 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்புள்ளது. இதற்காக அவர் தயாராகி வருகிறார். மூட்டு வலி காரணமாக, ஒன்றிரண்டு நாட்கள் ஓய்வெடுத்த முதல்வர், தற்போது துறை வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் முதல் வெவ்வேறு துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, கோரிக்கைகளை கேட்டறிகிறார். நேற்றும் காவிரி இல்லத்தில், சமூக நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்றும் சில துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அந்தந்த துறைகளுக்கு தேவைப்படும் நிதி, பாக்கியுள்ள திட்டங்கள், செலவிடப்படாமல் மிச்சமுள்ள நிதி, புதிய திட்டங்கள் குறித்தும் கேட்டறிவார்.
வரும் நாட்களில் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட, பலருடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார்.
மேலும்
-
டில்லியில் ஜெட் வேகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை: வீழ்ந்தது கெஜ்ரிவால் ராஜ்ஜியம்!
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு