கிருஷ்ணகிரி நகராட்சியில் ரகசிய கேமரா தனிப்படை போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அறையில் உள்ள, டிஜிட்டல் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்-பாக, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்குள்ள கமிஷனர் அறையில் டிஜிட்டல் கடிகாரத்தில், ரகசிய கேமரா இருந்ததை கடந்த, 29ல் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி டவுன் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே அந்த கேமராவில் கடந்த ஜன., 25ல், கமிஷனர் அறையில் நடந்த வாக்குவாத வீடியோ வைரல் ஆனது.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'கேமராவில் உரையா-டல்கள் தெளிவாக பதிவாகி உள்ளது. அதிநவீன கேமரா கமி-ஷனர் அறையில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. வேறு எங்கும் பொருத்தப்படவில்லை. அறையில் நடக்கும் நிகழ்வுகளை, நேரடி-யாக பார்க்கும் விதமாக கேமரா பொருத்தப்பட்டதாக சந்தேகிக்-கிறோம். கேமராவை பொருத்தியது யார்? எப்போது பொருத்தப்-பட்டது என்று விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.

Advertisement