டில்லி சட்டசபை தேர்தலில் வி.ஐ.பி., வேட்பாளர்களின் நிலை இதோ!
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849949.jpg?width=1000&height=625)
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி அடைந்தனர்.
புது டில்லி தொகுதி
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார். பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனுமான பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றார்.
ஜங்புரா தொகுதி
இந்த தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இந்த தொகுதியில் போட்டியிட்ட ஆம் கட்சி கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா 600 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கிரேட்டர் கைலாஷ்
இத்தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜூம், பா.ஜ., சார்பில் ஷிகா ராயும் போட்டியிட்டனர். இதில் ஷகா ராய், 49,594 ஓட்டுகள் பெற்று, 3,188 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மால்வியா நகர் தொகுதி
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில், மூத்த தலைவர் சோம்நாத் பாரதி போட்டியிட்டார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் சதீஷ் உபாத்யாய், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜிதேந்திர குமார் கோச்சார் ஆகியோர் போட்டியிட்டனர். பா.ஜ., வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 9,205 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். ஆம்ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி 7,805 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
கல்காஜி தொகுதி
இந்தத் தொகுதியில் தற்போதைய டில்லி முதல்வர், அதிஷி ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான அதிஷி வெற்றி பெற்றார்.
சத்தர்பூர் தொகுதி
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பிரம் சிங் தன்வார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் களத்தில் இறங்கினார். காங்கிரஸ் சார்பில் ராஜேந்தர் சிங் தன்வார் போட்டியிட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் பிரம் சிங் தன்வார் 15740 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். பா.ஜ., வேட்பாளர் கர்தார் சிங் 22658 ஓட்டுக்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 1,231 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
![ram ram](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Laddoo Laddoo](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![rama adhavan rama adhavan](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Ray Ray](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Ray Ray](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Ray Ray](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Muralidharan S Muralidharan S](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)