ஈரோட்டில் நோட்டா வாக்கு உயரும்; அண்ணாமலை கணிப்பு

9

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நோட்டா வாக்கு உயரும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



இது குறித்து அண்ணாமலை கூறியதாவது: ஈரோடு தொகுதியை பொறுத்தவரை நாங்கள் ரொம்ப தெளிவாக இருந்தோம். இன்றைக்கும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தேவையில்லாத தேர்தலாக தான் நாங்கள் பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கிறது. இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நோட்டா வாக்கு உயரும்.


அதேநேரத்தில் மகிழ்ச்சி. டில்லியில் பா.ஜ.,வுக்கு கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து மக்கள் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம். இதற்கு முந்தைய தேர்தலில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. அப்போது ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. 2013ம் ஆண்டு வித்தியாசமான அணுகுமுறையோடு வந்தார்கள்.



லோக்சபா தேர்தலில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்து 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்கள். 10 ஆண்டு காலமாக ஆம்ஆத்மி ஆட்சியை மக்கள் பார்த்து இருக்கிறார்கள். தற்போது புதிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். டில்லியை பொறுத்தவரைக்கும் எல்லா மாநில மக்களும் வசிக்கிறார்கள். பா.ஜ., கட்சி எல்லா இடத்திலும் முத்திரை பதித்து இருப்பது பா.ஜ., தொண்டராக எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement