மணல் ஓவியர் ராஜூ
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849954.jpg?width=1000&height=625)
சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் நடந்துவரும் கலா சந்தை என்ற கைவினைப் பொருள் கண்காட்சியில் நாட்டில் எங்குமே பார்க்கமுடியாத மணல் ஒவிய கண்காட்சி இடம் பெற்றுள்ளது.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜூ
குடும்ப சிரமத்தைக் குறைக்க படிப்பை பாதியிலேயே விட்டு வேலைக்கு சேர்நதார்.ஆனால் சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்ததால் பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கண் விழித்திருந்து ஓவியங்கள் வரைவார்.
ஒரு கட்டத்தில் பலரும் ஓவியங்கள் வரைகின்றனர் நாம் அதில் இருந்து தனித்து தெரியவேண்டும் என்பதற்காக ஆற்று மணலை பதப்படுத்தி அதில் ஓவியம் வரைந்தார்.
ஒரு இடத்தை அல்லது படத்தை உள்வாங்கி அதை பல கோணங்களில் வரைந்து பார்த்து பின் நிறைவாக இவர் வரையும் மணல் ஒவியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேர மணல் ஓவியராகிவிட்டார்.
கடந்த இருபது ஆண்டுகளாக இவர் மணல் ஓவியராக இருக்கிறார்,இப்படி மணல் ஓவியம் வரைவது நாட்டிலேயே இவர் மட்டுமே. தான் வரைந்த ஓவியங்களைக் கொண்டு பல்வேறு பெரு நகரங்களில் கண்காட்சி நடத்தியுள்ளார்.
தற்போது நடைபெறும் கண்காட்சியில் வைத்துள்ள யானை,புலி,தஞ்சாவூர் பெரிய கோவில்,கிரிக்கெட்டர் டோனி,கதகளி,காஞ்சி பெரியவர் உள்ளீட்ட மணல் ஓவியங்கள் தத்ரூபமாக பார்ப்பவர்கள் வியக்கும் வகையில் உள்ளது.
பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு அவர்களது படங்களையே இப்படி மணல் ஓவியமாக வரைந்து பரிசாக கொடுப்பதால் தனது ஒவியத்திற்கு தற்போது மிகப்பெரிய சந்தை மதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.
தற்போது மணமக்கள் படங்கள் தங்கள் பெற்றோர் படங்களை வரைந்து கேட்பவர்கள் அதிகரித்து வருகின்றனர் யார் கேட்டாலும் படங்கள் வரைந்து கொடுக்க தயராக இருக்கிறேன் என்று சொல்லும் ராஜூவிடம் பேவதற்கான எண்:78714 24384.
-எல்.முருகராஜ்
மேலும்
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க., வெற்றி!
-
டில்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.,41ல் வெற்றி; 9ல் முன்னிலை
-
டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றிக்கு காரணம் என்ன?
-
பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தால் இதுதான் கதி; ஆம்ஆத்மி தோல்வி குறித்து ஸ்வாதி மலிவால் கருத்து
-
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி: சிசு உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி
-
டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம்: பிரதமர் மோடி