செங்கை அரசு பள்ளி மாணவர்கள் மாநில டேக்வாண்டோவில் அசத்தல்

திருப்போரூர், பிப். 9-

மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2025 போட்டி, சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ - மாணவியர் மூன்று பிரிவுகளில் பங்கேற்றனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு பயர் டேக்வாண்டோ கிளப் சார்பில் குன்னப்பட்டு, மானாமதி, செம்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர் 20 பேர் பங்கேற்றனர்.

இவர்களில், 10 பேர் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றனர். 5 பேர் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். 2 பேர் மூன்றாமிடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றனர்.

மேற்கண்ட மாணவ - மாணவியர் அனைவரும், வரும் ஜூன் மாதம் மகாராஷ்டிரா மாநிலம், லக்னோவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

Advertisement