அகில இந்திய 'பீச்' வாலிபால் கல்லுாரிகளுக்கு அழைப்பு

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலையின், விளையாட்டு துறை இயக்குனரகம் சார்பில், அகில இந்திய பீச் வாலிபால் போட்டி, மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் பல்கலை வளாகத்தில் உள்ள பீச் விளையாட்டு திடலில் இப்போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க நாடு முழுதும் இருந்து, கல்லுாரி மற்றும் பல்கலை அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், மொத்த பரிசு தொகையாக, 1 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பங்கேற்க விரும்பும் அணிகள், இம்மாதம் 25ம் தேதிக்குள், directorateofsportssrm@gmail.com என்ற மெயிலில் பதிவு செய்யலாம்.

விபரங்களுக்கு, 70100 32478, 97911 15678 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டு துறை இயக்குநர் மோகனகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement