போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்

சிவகாசி: சிவகாசி தனி ஆயுதப்படை போலீசாருக்கு டாக்டர் அணில் குமார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

எஸ்.பி., கண்ணன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., பாஸ்கரன் முன்னிலை வகித்தார். எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., கள், போலீசார் என அனைவரும் கண் பரிசோதனை மேற்கொண்டனர். டாக்டர் அணில் குமார் கண் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

Advertisement