வெம்பக்கோட்டையில் கூடுதல் மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ. 5 கோடியில் அமைப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் கூடுதல் மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ. 5 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டையில் கூடுதல் மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் பணிகள் ரூ. 5 கோடியில் நடந்தது. இங்கு 200 மீ வீதம் 10 மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் மொத்தம் 2 ஆயிரம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வளர்க்கப்படும் ரோகு, சாதா கெண்டை, கட்லா, மிர்கால் ஆகிய மீன் இனங்களின் 10 லட்சம் மீன் குஞ்சுகளை வெம்பக்கோட்டை நீர்தேக்கம், சுற்றியுள்ள கண்மாய்களில் இருப்பு வைக்க முடியும்.

மேலும் மீன் குஞ்சுகள் தனியாருக்கு கட்லா 1000 குஞ்சுகளுக்கு ரூ. 750, ரோகு, மிர்கால் 1000 குஞ்சுகள் ரூ. 600, சாதா கெண்டை 1000 குஞ்சுகள் ரூ. 450 என விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாடு முகமை பயனாளர்களுக்கு விற்பனை விலையில் 20 சதவீதம் குறைத்து கட்லா 1000 குஞ்சுகள் ரூ. 500, ரோகு ரூ. 400, சாதா கெண்டை ரூ. 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement