அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாஜி முதல்வர் உட்பட 51 பேர் கைது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850561.jpg?width=1000&height=625)
புதுச்சேரி: இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தவறிய மத்திய மாநில அரசு, வேலை வாய்ப்பு அறிவிப்பு இல்லாத மத்திய பட்ஜெட்டை கண்டித்து இளைஞர் காங்., சார்பில் ஜென்மராகினி மாதா கோவில் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு, சீனியர் துணை தலைவர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
என்.ஆர்.காங்., அரசை டிஸ்மிஸ் செய்ய கோரி கவர்னரை சந்திக்க உள்ளதாக கூறி காங்., கட்சியினர் முன்னேறி சென்றனர். போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுத்தனர். இதனால் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சிலர் பேரி கார்டுகளை தாண்டி குதித்தனர். தொடர்ந்து முன்னேறி சென்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உட்பட 51 பேரை பெரியக்கடை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்திற்கு பின்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
காரைக்கால்
காரைக்கால் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,, முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன். வட்டார தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்னறர்.
மேலும்
-
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி
-
பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்
-
டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?