கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி

2


ஜார்ஜ் டவுன்: கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அதனை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள கேமன் தீவுகளில் இருந்து 129 மைல் தொலைவில் கடலில் 10 கி.மீ., ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அதேநேரத்தில், கடலை ஒட்டி உள்ள பியூர்டோ ரிகோ, அமெரிக்க விர்ஜீன் திவுகள், ஹோண்டுராஸ், சில கரீபியன் நாடுகளில் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியுள்ளது. இதனால், கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச சுனாமி தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தால், அடுத்த 3 மணி நேரத்தில் கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பஹமாஸ், ஹைதி, துர்க்ஸ், கைகோஸ், டாமினிகன் குடியரசு, கொலம்பியா, பனாமா, பியூர்டோ ரிகோ, கோஸ்டா ரிகா, அமெரிக்க விர்ஜின் தீவு, பிரிட்டன் விர்ஜின் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி தாக்கலாம் எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisement