' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850665.jpg?width=1000&height=625)
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த ஒருவர் வழுக்கைத் தலையில், நிறுவனங்களின் விளம்பரம் மூலம் சம்பாதித்து வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாட்டில் இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை வழுக்கைத் தலை பிரச்னை உள்ளது. இதனால் கவலையடைந்து அதனை சரி செய்வதற்காக பலர் பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். இதற்காக முடி மாற்று சிகிச்சைக்கு செல்கின்றனர். சிலர் விக் வைத்துக் கொள்கின்றனர். முடி கொட்ட ஆரம்பித்ததும், பலரிடம் யோசனை கேட்டு அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்குகின்றனர்.
இவர்களுக்கு மத்தியில் பல சுற்றுலா இடங்களுக்கு சென்று தனது பயண அனுபவத்தை வீடியோவாக வெளியிடும் 36 வயதான ஷபீக் ஹசீம் என்பவர், தனக்கு உள்ள வழுக்கை தலை பற்றி கவலைப்படாமல், அதில் நிறுவனங்களின் விளம்பரம் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்.
ஆழப்புழாவை சேர்ந்த இவர், தனது வழுக்கைத் தலையில் விளம்பரம் செய்வதற்கான அறிவிப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். சுற்றுலா பயணங்களை அனுபவமாக வெளியிடுவதால், அவரை ஏராளமானோர் பேஸ்புக் பக்கத்தில் பின் தொடர்ந்து வந்தனர். அதில் பல நிறுவனங்களும் அடக்கம். இவர்களின் பார்வைக்கு விளம்பரம் வந்ததும், உடனடியாக அவரை அணுகத் துவங்கின. இதனால், அவரும் சம்பாதிக்க துவங்கினார். அவரின் ஒப்பந்தப்படி விளம்பரத்துடன் 3 மாதங்கள் பல இடங்களுக்கு செல்வார். பேஸ்புக் பக்கத்திலும் அப்படியே வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவார். விளம்பரத்துடன், அந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரியை ' டாட்டூ' ஆக வழுக்கைத் தலையில் வரைந்து கொள்கிறார். இந்தியாவிலேயே வழுக்கைத் தலையில் விளம்பரம் சம்பாதிக்கும் ஒரே நபர் நான் தான் என அவர் பெருமிதம் கொள்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கல்லூரி படிக்கும் நாட்களிலேயே வழுக்கைத் தலை பிரச்னை ஏற்பட்டது. இதனால், பலரின் கேலி, கிண்டலுக்கு ஆளானேன். இதனால், முடிமாற்று சிகிச்சை செய்யலாம் என திட்டத்திலும் இருந்தேன். ஒரு நாள் இதனை மாற்றி, வழுக்கைத் தலையை மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டேன். அப்போது தான் அதில் விளம்பரம் செய்யும் 'ஐடியா' உருவானது என்கிறார். இவரின் இந்தத் திட்டத்தை பார்த்து பலரும் வியப்படைந்து வருகின்றனர். பணம் சம்பாதிக்க புது வழியாக இருப்பதால், இதனை பின்பற்றலாமா என சிந்திக்க துவங்கி உள்ளனர்.
![ஆரூர் ரங் ஆரூர் ரங்](https://img.dinamalar.com/data/uphoto/271873_205342590.jpg)
![நிக்கோல்தாம்சன் நிக்கோல்தாம்சன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: அண்ணாமலை கேள்வி
-
ஏற்காட்டில் அரசு ஏகலைவா பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
-
மெக்சிகோவில் பஸ்-லாரி மோதி விபத்து: 41 பேர் பரிதாப பலி
-
சிபில் ஸ்கோரால் கடைசி நேரத்தில் நின்ற திருமணம்: மஹா.,வில் மணமகன் அதிர்ச்சி
-
நகராட்சி கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா வைத்த விவகாரம்: நகர தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்
-
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி