டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850666.jpg?width=1000&height=625)
கோல்கட்டா: ''டில்லியில் ஆட்சியை பிடித்து விட்டோம். அடுத்து மேற்கு வங்கத்திலும் ஆட்சியை பிடிப்போம்,'' என பா.ஜ., தலைவர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு சவாலாக உள்ளது. தொடர்ந்து அந்தக்கட்சி ஆட்சியை பிடித்து வருகிறது. 2019, 2024 லோக்சபா தேர்தலில், அங்கு பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 2021 சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ. தற்போது சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.
இந்நிலையில், டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை 27 ஆண்டுகளுக்கு பிறகு பிடித்து உள்ளது. இதனை அக்கட்சி தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேற்கு வங்கத்தை சேர்ந்த பா.ஜ., தலைவர்கள், டில்லியை பிடித்து விட்டதால், அடுத்த மேற்கு வங்கத்தையும் பிடிப்போம் எனக்கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக பா.ஜ.,மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது: டில்லியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறோம். அடுத்து 2026ல் மேற்கு வங்கத்திலும் எங்களுக்கு தான் வாய்ப்பு என்றார்.
மற்றொரு தலைவரான சுகந்தா மஜூம்தார் கூறுகையில், அடுத்த சட்டசபை தேர்தலில் மேற்கு வங்க மக்கள் பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள் என்றார்.
டில்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்து இருந்தது. இருப்பினும் டில்லியில் வசிக்கும் மக்கள் யாருக்கு ஓட்டளித்தனர் என்ற தகவல் இல்லை. ஆனால், சுவேந்து அதிகாரியும், சுகந்தா மஜூம்தாரும், டில்லியில் உள்ள மேற்கு வங்க மக்கள் பா.ஜ.,வுக்கு தான்ஓட்டளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினர்.
![venugopal s venugopal s](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Seekayyes Seekayyes](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![T.sthivinayagam T.sthivinayagam](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Seekayyes Seekayyes](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![rajan_subramanian manian rajan_subramanian manian](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![ஈசன் ஈசன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![vijai vijai](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Seekayyes Seekayyes](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
என்கவுன்டரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொலை: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் அதிரடி
-
டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலகினார் அதிஷி
-
வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: அண்ணாமலை கேள்வி
-
ஏற்காட்டில் அரசு ஏகலைவா பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
-
மெக்சிகோவில் பஸ்-லாரி மோதி விபத்து: 41 பேர் பரிதாப பலி
-
சிபில் ஸ்கோரால் கடைசி நேரத்தில் நின்ற திருமணம்: மஹா.,வில் மணமகன் அதிர்ச்சி