பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்

29


வேலூர்: '' டெபாசிட் போனது, பணம் பறிபோனது குறித்து நாம் தமிழர் கட்சியின் கவலைப்பட மாட்டார்கள். அது ஒரு பொழுதுபோக்கு மன்றம்,'' என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- நாம் தமிழர் கட்சி இடையே போட்டி நிலவியது. இத்தேர்தலில் தி.மு.க., 90 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாம் தமிழர் கட்சி 24,151 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.



இந்நிலையில் வேலூரில் நிருபர்களைச் சந்தித்த துரைமுருகன் கூறியதாவது: காலநிலை ஊருக்கு ஊர் மாறும். ஒரு சில இடங்களில் குளிர் இருக்கலாம். அரசியல் தட்பவெப்பநிலைக்கு ஏற்க அங்கு அரசியல் நடக்க வேண்டும். அப்படித்தான் டில்லியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. அனைத்து ஊர்களிலும் தாமரை மலரலாம். மலர செய்கிறார்களா என தெரியாது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பிரதமர் மோடியாலும் முடியாது. அக்கூட்டத்தினாலும் முடியாது.


ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட் பணம் போனதால் நாம் தமிழர் கட்சியினர் கவலைப்பட மாட்டார்கள். டெபாசிட் வருவது போவது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அது ஒரு பொழுது போக்கு மன்றம். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

Advertisement