வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: அண்ணாமலை கேள்வி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850673.jpg?width=1000&height=625)
சென்னை: ''இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 - 2022 முதல், 2023 - 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லையென்றால், பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்?
அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா ?
ஆட்சிக்கு வந்து ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்து, அப்பாவி மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, வருடம் ஒரு மாதம், பேரிடர் நிவாரண நிதி என்று திமுகவினர் ஒப்பாரி வைப்பதால், பொதுமக்களுக்கு என்ன பலன்? இத்தனை ஆண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எந்தெந்த வழிகளில் செலவிட்டீர்கள், இன்னும் என்னென்ன செலவுகளுக்காக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று தெளிவாக மத்திய அரசிடம் கேட்க முதல்வரை எது தடுக்கிறது? மழை வந்த இரண்டாம் நாளே, குத்துமதிப்பாக இத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி வேண்டும் என்று கேட்பது உங்கள் அரசியல் நாடகத்திற்காக தான் என்பதை மக்கள் அறிவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல், தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பார்லிமென்டிற்கு அனுப்பப்பட்ட திமுக எம்.பி.,க்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டில்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.
இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பார்லிமென்டில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டுவிட்டீர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
![K.n. Dhasarathan K.n. Dhasarathan](https://img.dinamalar.com/data/uphoto/104499_081642100.jpg)
![M Ramachandran M Ramachandran](https://img.dinamalar.com/data/uphoto/229077_155625823.jpg)
![Kasimani Baskaran Kasimani Baskaran](https://img.dinamalar.com/data/uphoto/11774_043521289.jpg)
![பாமரன் பாமரன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![A.Gomathinayagam A.Gomathinayagam](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![கோபாலகிருஷ்ணன் பெங்களூர் கோபாலகிருஷ்ணன் பெங்களூர்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Kumaraguru Kumaraguru](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![குமரன் குமரன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![ES ES](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![பாமரன் பாமரன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![S.Martin Manoj S.Martin Manoj](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)