டில்லி சட்டசபை கலைப்பு: கவர்னர் உத்தரவு

39

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து அதிஷி விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னர் சக்சேனாவிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சட்டசபையை கலைத்து கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.


டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி பறிபோனதால், ஆம் ஆத்மி கட்சியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதனையடுத்து, டில்லி முதல்வராக இருக்கும் அதிஷி, கவர்னர் சக்சேனாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பதவி விலகலை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

உத்தரவு




இதனைத் தொடர்ந்து டில்லி சட்டசபையை உடனடியாக கலைத்து கவர்னர் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement