வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றம், கடந்த, 3ல் நடந்தது. தொடர்ந்து நேற்று வரை, சேஷ, புலி, பூத, யானை உள்பட, 8 வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில், நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.
தொடர்ந்து சிறு தேரில் எழுந்தருளும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. 7ம் நாளான நேற்று காலை, கோவிலில் உள்ள சுவாமி, உற்சவருக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவிக்கப்பட்டது. இரவு, கல்யாண மண்டபத்தில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமிகளுக்கு பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து, கோவிலில் நிறைவடைந்தது.
நாளை அன்னாபிேஷகம் தைப்பூசத்தையொட்டி, சேலம், கொண்டலாம்பட்டி வேல்முருக சுப்ரமணியர் கோவிலில் நாளை காலை, 10:30 மணிக்கு பால், தயிர், இளநீர் உள்பட, 16 வகை மங்கள பொருட்களால் மூலவர் சுப்ரமணியருக்கு அபிேஷகம் செய்யப்படும். மதியம், சிவாலயங்களில் நடப்பதை போல் மூலவருக்கு அன்னத்தால் அலங்கரித்து அன்னாபி ேஷக கோலத்தில் மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்படும்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதேபோல் ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடியில் உள்ள சுப்ரமணியர், முத்துக்குமாரசாமி மற்றும் ஆதிவிநாயகர் கோவில்களில், தைப்பூச திருவிழா நாளை நடக்க உள்ளது.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்