ஓட்டுநர் இல்லா 2வது மெட்ரோ ரயில் வருகை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3851396.jpg?width=1000&height=625)
பெங்களூரு : 'நம்ம மெட்ரோ' மஞ்சள் பாதையில் இயங்கவுள்ள ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில், நேற்று பெங்களூரின் ஹெப்பகோடியை வந்தடைந்தது.
இது குறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மெட்ரோ மஞ்சள் பாதை பணிகள் முடிந்துள்ளன. இப்பாதை ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையே 18.8 கி.மீ., துாரம் கொண்டதாகும். இதில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படும். சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.
தற்போது இருக்கும் ஒரு ரயிலை பயன்படுத்தி, புதிய பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது இரண்டாவது ரயில் ஹெப்பகோடி டிப்போவை இன்று (நேற்று) வந்தடைந்தது.
மஞ்சள் பாதையில் இயக்கப்பட உள்ள, ஓட்டுனர் இல்லாத ரயில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள, 'டிடாகர்' ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரானது. தற்போது வந்துள்ள ரயிலை பயன்படுத்தி, சிக்னலிங் பரிசோதனை நடத்தப்படும்.
இன்று (நேற்று) வந்த ரயில் உட்பட ஓட்டுநர் இல்லாத இரண்டு ரயில்கள் வந்துள்ளன. மார்ச் முதல் வாரம் மூன்றாவது ரயில் வரும் என, எதிர்பார்க்கிறோம்.
அதன்பின் இப்பாதையில் வர்த்தக போக்குவரத்து துவங்கும். ஓட்டுநர் இல்லாத ரயில், அதிநவீன தொழில் நுட்பம் கொண்டதாகும்.
மஞ்சள் மெட்ரோ பாதையில், பொம்மசந்திரா, ஹெப்பகோடி, ஹுஸ்கூர் சாலை, இன்போசிஸ் பவுண்டேஷன், எலக்ட்ரானிக் சிட்டி, பெரட்டேனே அக்ரஹாரா, ஹொசா சாலை, சிங்கசந்திரா, கூட்லுகேட், ஹொங்கசந்திரா, பொம்மனஹள்ளி, சென்ட்ரல் சில்க் போர்டு, பி.டி.எம்., லே - அவுட், ஜெயதேவா மருத்துவமனை, ராகிகுட்டா, ஆர்.வி.சாலை நிலையங்கள் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்