சி.எஸ்.கே.,பள்ளிகள் கிரிக்கெட் நேருஜி நினைவு பள்ளி வெற்றி
திண்டுக்கல்: சி.எஸ்.கே., திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கிடையேயான லீக் போட்டியில் நேருஜி நினைவு பள்ளி வெற்றி பெற்றது. லீக்போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ரிச்மேன், ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அக்சுதா அகாடமி அணி 19 ஓவர்களில் 80 க்கு ஆல்அவுட் ஆனது. சந்தோஷ் 3 விக்கெட். சேசிங் செய்த நேருஜி நினைவு பள்ளி 12.3 ஓவர்களில் 83/5 எடுத்து வெற்றி பெற்றது. சந்தோஷ்ராஜ் 3 விக்கெட். திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., பள்ளி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 142/3. ஹர்சன் 49 ரன். சேசிங் செய்த எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 25 ஓவர்களில் 138/8 எடுத்து தோற்றது. சித்தார்த் 79 ரன். முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பி அணி 25 ஓவர்களில் 129/6.
நாட்ராயதருண் 42. சேசிங் செய்த வடமதுரை அரசுப்பள்ளி 22.4 ஓவர்களில் 96 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சுஜித்சுனில்குமார் 39, முனீஸ்வரன் 30, மதுஸ்ரீ, தனிஷ் தலா 3 விக்கெட். ஒட்டன்சத்திரம் பட்ஸ் பள்ளி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 148/3. அபிநயசந்தோஷ் 87(நாட்அவுட்). சேசிங் செய்த செட்டிநாயக்கன்பட்டி அரசுப்பள்ளி 7.1 ஓவர்களில் 32 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.
திருமலைஹரிஷ் 3, அஸ்ரங்காசந்தோஷ் 5 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா ஏ அணி 25 ஓவர்களில் 161/5. ஸ்ரீஹரி 43. சேசிங் செய்த வேடசந்தார் பெட்போர்டு பள்ளி அணி 12 ஓவர்களில் 43 க்கு ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. சிவேஷ்தருண் 3, ஸ்ரீஹரி 5 விக்கெட்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்