கல்லுாரியில் கருத்தரங்கம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தார். முனைவர்கள் முத்துப்பாண்டியன், தாமரைச்செல்வி, சுரேந்திரன் பேசினர். கல்லுாரி மாணவிகளுக்கான பேப்பர் பிரசன்டேஷன் நடந்தது. முதல் பரிசை மங்கையர்கரசி கல்லுாரி மாணவிகளும், 2ம் பரிசை எஸ்.எஸ்.எம் கல்லுாரி மாணவிகளும்,3ம் பரிசு சக்தி மகளிர் கலை கல்லுாரி மாணவிகளும் பெற்றனர். வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை தலைவர் சாமுண்டீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.

Advertisement