நாடார் உறவின்முறை வைர விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நாடார் உறவின் முறையின் 60 ஆண்டு வைர விழா நடந்தது. தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் காமராஜர் சிலையிலிருந்து எம்.எஸ்.பி.பள்ளி வரை ஊர்வலம் நடந்தது.

துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், ஜி.டி.என். கல்லுாரி முதன்மை செயலர் ரத்தினம், மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம், எஸ்.கே.சி.டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் குப்புசாமி, சமூக ஆர்வலர் காஜாமைதீன்,முன்னாள் மேயர் மருதராஜ், நாடார் உறவின்முறை செயலாளர் மதி தேவராஜன், பொருளாளர் கணேஷ், துணைத் தலைவர் சுரேஷ் குமார், இணைச்செயலாளர் மலர்க்கண் பங்கேற்றனர். மாலையில் வைர விழா மணிமகுட நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமி, எஸ்.எஸ்.எம்., குரூப்ஸ் நிறுவனர் வேலுச்சாமி, நாடார் மகாஜன சங்க செயலாளர் கரிக்கோல் ராஜ், பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி இணை சேர்மன் ரகுராம், எம்.எல்.ஏ., செந்தில்குமார், எம்.பி.,சச்சிதானந்தம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணைமேயர் ராஜப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, பரமசிவம், அ.தி.மு.க., நத்தம் கண்ணன், காங்., மாவட்ட தலைவர் மணிகண்டன், பா.ஜ.. முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், பி.எம்.எஸ்., வெங்கடேசன் பங்கேற்றனர். காணொளி காட்சி, வாசுகி மனோகரன் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement