மாநில அளவில் 'சிம்போசியம்'

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, புளியம்பட்டி பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரியில், மாநில அளவிலான 'சிம்போசியம்' நடந்தது. கல்லுாரி தலைவர் அப்புகுட்டி தலைமை வகித்தார். முன்னதாக, முதல்வர் பொன்னம்பலம் வரவேற்றார்.

கோவை எக்ஸ்பிளோர் ஐ.டி., நிறுவன நிறுவனர் சதீஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து, மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பேசினார். கருத்தரங்கு மற்றும் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.

இதில், பல மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்பக் கல்லுாரிகளைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முறையே முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி முதன்மை செயல் அலுவலர் மணிகண்டன், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement