அலுவலருக்கு மிரட்டல் கைதி மீது வழக்கு; போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது

கடலுார், : கடலுார் மத்திய சிறை அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார், மத்திய சிறை அலுவலர் (பொறுப்பு) பிரகாஷ், 34; இவர், நேற்று முன்தினம் சிறை போலீசாருடன், அறை எண்.9ல் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த விசாரணை கைதியான, சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன், 33; என்பவர், பிரகாஷை பணி செய்யவிடாமல், தடுத்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement