சாலையில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம் சுகாதார சீர்கேடு
ஊட்டி : ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் அடிக்கடி கழிவு நீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சேரிங்கிராஸ் சாலையில், அரசு கலைக் கல்லுாரி செல்லும் பகுதியில், பாதாள சாக்கடை சேதமடைந்து கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. அருகில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளதால், கல்லுாரி மாணவர்கள் உட்பட, குன்னுார் வழியாக செல்லும் நுாற்றுக்கணக்கான பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
தவிர, ஆர்.டி.ஓ., அலுவலகம், தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு தேவைகளுக்காக இச்சாலையில் சென்று வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், கடந்த சில நாட்களாக, பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்