வில்லியனுார் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3851306.jpg?width=1000&height=625)
வில்லியனுார் : வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார். வேளாண் பயிற்றுனர் விநாயகம் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். பள்ளி வேதியியல் விரிவுரையாளர் முரளி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, தெற்கு சப் கலெக்டர் அன்கித்குமார் பங்கேற்று, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்புகள் குறித்து பேசினார். மேலும், இவ்வாண்டு முதன் முதலாக சி.பி.எஸ்.இ., தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ 2 வகுப்பு மாணவர்களை வாழ்த்தியும், பள்ளியில் நடந்த 'போதை அழிவின் பாதை' என்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கினார்.
நிகழ்ச்சியை தமிழ் விரிவுரையாளர் வித்யா தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர்கள் செல்வம், குமரன், இந்திரா, லதா, ராஜேஷ், தேவிபாலா, அருள்செல்வி, ரவிசங்கர், நுாலகர் பத்மநாபன், கணினி ஆசிரியர்கள் பிரதாப், முருகானந்தம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் இறைவாசன் செய்தார். பள்ளி விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்