குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி : பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே உள்ள பெட்டிக்கடையில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

அதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார், அந்த கடையை, நேற்று சோதனை செய்தனர். அதில் கடையில் புகையிலை பொருட்கள் இருந்ததை, கண்டறிந்தனர். கடை நடத்திய முத்திரையர்பாளையத்தை சேர்ந்த வடிவேலு, 58, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement