'எரியாத' தீபம்; ஏமாறும் பக்தர்கள் அய்யன்கோவிலில் அவலம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3851330.jpg?width=1000&height=625)
திருப்பூர் : திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. கேது பரிகார தலம் என்று கூறப்படுவதால், சர்ப்பதோஷம் உள்ளிட்ட நிவர்த்திக்காக, பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். கோவிலில், செம்மண் நீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவிலில், தீபம், பிரசாதம் மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. கோவிலில் விற்கப்படும் நெய் தீபம் தரமில்லாமல் இருப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் கேட்கும் அளவில், ஒரு விளக்கு, இரண்டு விளக்கு என விற்பதில்லை; மொத்தமாக, ஐந்து விளக்கு, 50 ரூபாய் என்ற கட்டணத்தில் விற்கப்படுகிறது. இருப்பினும், பக்தர்கள் வாங்கி தீபம் ஏற்றிவைக்க போராட வேண்டியுள்ளது.
பக்தர்கள் கூறுகையில், 'கோவிலுக்கு வந்தால், அகல் விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். கோவிலில், அதிக விலைக்கு அகல் விளக்கு விற்கின்றனர். கோவில் வருவாயை பெருக்க வேண்டுமென, இப்படி செய்கின்றனரா என்று தெரியவில்லை.
இருப்பினும், வசூலிக்கும் பணத்துக்கு ஏற்ப தரமான விளக்கு கொடுப்பதில்லை. நெய் விளக்கு என்கின்றனர். ஏற்றி வைக்க போராட வேண்டியுள்ளது; எளிதில் தீபம் பற்றுவதில்லை. விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கோவில் உதவி கமிஷனர் (பொறுப்பு) ரத்தினாம்பாளிடம் கேட்டபோது, ''இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்