ஜல்லிக்கட்டு வீரர் முன்பதிவு

பொங்கலுார் : அலகுமலையில் வரும் 16ல் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதை முன்னிட்டு மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தலைவர் பழனிசாமி தலைமையில் நேற்று துவங்கியது.

முன்பதிவு துவங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில்,600 மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு முடிவுற்றது. இளைஞர் அணி தலைவர் கவுரிசங்கர், இளைஞரணி நிர்வாகிகள் கந்தசாமி, கார்த்தி, ஜீவானந்தம், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement