தடகளப் போட்டிகள் திருப்பூர் 'பதக்க மழை'

திருப்பூர் : ராஜஸ்தான் மாநிலம், அல்வர் நகரில், இந்தியா மாஸ்டர் அத்லெட்டிக் 44வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்., 5 முதல்8ம் தேதி வரை நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 2000 பேர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இந்தியா மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் திருப்பூரில் இருந்து 40 வயது பிரிவில் பங்கேற்ற விஜயலட்சுமி நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், 35 வயது பிரிவில் பங்கேற்ற சண்முகராஜ் குண்டு எறிதல், வட்டு எறிதலில் தங்கம், சங்கிலிகுண்டு எறிதலில் வெள்ளி, சங்க செயலாளர் சுமதி சங்கிலிக்குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதல், குண்டு எறிதலில் வெண்கலம், ராமச்சந்திரன் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இவர்களை திருப்பூர் வெட்ரன்ஸ் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் நாகராஜ் பாராட்டினார்.

Advertisement