ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கை புதுச்சேரி எம்.பி., கேள்வி

புதுச்சேரி : ரேபிஸ் நோயை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து, லோக்சபாவில் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் லோக்சபாவில் பேசியது:

தடுப்பூசி போடப்படாத தெருநாய்கள், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் வசிப்பது, அதிகளவில் ரேபிஸ் நோய் பரவ காரணமாக உள்ளது. இது மத்திய அரசுக்கு தெரியுமா, அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், குடியிருப்பு பகுதிகளில் தடுப்பூசி போடப்படாத தெருநாய்கள், வசிப்பது, நாட்டில் வெறிநாய்க்கடி நோய் அளிகளவில் ஏற்பட காரணமாக உள்ளது.

ஏற்கனவே 12வது, ஐந்தாண்டு திட்டத்தில், நாடு முழுவதும், தேசிய ரேபிஸ் நோய் கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க செயல் முறையும் உருவாக்கப்பட்டுள்ளது என, தெரிவித்தார்.

Advertisement