புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றவர் படுகாயம்
திருப்பூர், கோவையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது.
இரண்டாவது பிளாட்பார்மில் இருந்து ரயில் புறப்பட்டவுடன் பொது பெட்டியில், திருப்பூர் பாரப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி இசக்கிமுத்து, 45, பிரதீபா,40 ஆகியோர் ஏற முயன்றனர்.
மனைவி பிளாட்பார்மில் விழுந்து விட, கணவர் தண்டவாளத்துக்கும் - ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக்கொண்டனர்.
கணவருக்கு கால், இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது; 'கார்டு' சிக்னலையடுத்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட் டது. கணவர் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; பெண் நலமாக உள்ளார்.
திருப்பூர் ரயில்வே எஸ்.ஐ., விஜயகுமார் கூறுகையில், ''தம்பதியர் திருநெல்வேலிக்கு டிக்கெட் எடுத்திருந்தனர். ரயில் கிளம்பிய பின், ஏற முயற்சித்தால், தடுமாறி விழுந்து விட்டனர்'' என்றார்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்