மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட தும்பிவாடி, ஐந்து ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார், தும்பிவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர், மது விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement