நாட்டுக்கோழி விலை சரிவு
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுாரை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டு வாங்கிச்செல்வர். கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 500 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 400 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், ப.வேலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள், தைப்பூச திருவிழாவுக்கு விரதம் இருப்பதால், நாட்டுக்கோழி விலை சரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement