மாணவியை கர்ப்பமாக்கிய எலக்ட்ரீஷியன்; பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, சப்பையாபுரம் வேட்டைக்காரன் வீதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் விஜயகுமார், 39; எலக்ட்ரீஷியன். இவருக்கு மனைவி, 8, 7 வயதில் மகன், மகள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர், 19 வயது மாணவி; ராசிபுரம் அரசு கலை கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஆக., மாதம், ஆட்டையாம்பட்டியில் நடந்த பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு தாயுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு மாணவி மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்ற விஜயகுமார், அவருடன் பழகியதில், தற்போது, ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்து, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மகளுக்கு நீதிகேட்டு, ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் சாலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெண்ணந்துார் இன்ஸ்பெக்டர் சுகவனம், எஸ்.ஐ., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு கைலந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement