சாலையில் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர்: கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், கரூர்-திருச்சி, கரூர்-சேலம், கரூர்-மதுரை போன்ற சாலையில் பஸ்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதில், எம்.சாண்ட் மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து சிதறி விழும் மணல், சாலையில் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகள், சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில், மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து சிதறி விழும் மணல் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர், மணலில் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில் சாலையோரம் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement