அக்கா, தம்பியை தாக்கிய இருவர் மீது வழக்குப்பதிவு

குளித்தலை: குளித்தலை அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா, 27; இவருக்கும், கணவர் தமிழரசனுக்கும், கடந்த, 21ல் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, கணவரின் உறவினர்கள் விஜயராகவன், சூர்யா ஆகிய இருவரும், கவுசல்யா மற்றும் அவரது சகோதரர் கவின் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கவுசல்யா அளித்த புகார்படி, குளித்தலை போலீசார், இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement