தாய் மாயம்: மகன் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த கம்மநல்லுாரை சேர்ந்தவர் முத்துக்குமார், 42; டாஸ்மாக் விற்பனையாளர். இவரது தாயார் சரோஜா, 60; சமையல் தொழிலாளி.

கடந்த, 31ல் சமையல் வேலைக்கு சென்ற சரோஜா, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர் வீட்டில் விசாரித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகன் முத்துக்குமார் அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் சரோஜாவை தேடி வருகின்றனர்.

Advertisement