அரசு பணிக்கு இடையூறு; 3 பேரை தேடும் போலீசார்

குளித்தலை: கடவூர் யூனியன், தரகம்பட்டி நெடுஞ்சாலையில், கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

அப்போது அங்கு வந்த பிரேம்நாத், திருப்பதி, கருப்பையா ஆகிய மூவரும் வழிமறித்து, பணி செய்ய விடாமல், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தனி ஆய்வாளர் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், மூவர் மீதும் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement