முள் செடிகளை அகற்ற கோரிக்கை

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனுாரில் இருந்து, செல்லாண்டிபாளையத்துக்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் குறிப்பிட்ட துாரம் வரை சாலை குறுகிய நிலையில் உள்ளது. அதிகளவு முள்செடிகள் சாலை வரை படர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது.

இரவில், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முள் செடிகளால் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்துள்ள முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement