தேர்வு பயத்தை போக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு பயத்தை போக்கும் பரிக்ஷா பே சர்ச்சா 2025 என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கம்பன் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரசு செயலர் ஜவஹர் வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, மாணவர்களுக்கான தேர்வு பயத்தை போக்கும் 'பரிக்ஷா பே சர்ச்சா' விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.

இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலர் ஷரத்சவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் நமச்சிவாயம் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினர். பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement