10வது படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்கள்

புதுடில்லி; ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


ரயில்வேயில் பல்வேறு துறைகளில் அவ்வப்போது பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 32,438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் தமிழகத்தின் தெற்கு ரயில்வேயில் 2694 காலி பணியிடங்கள் இருக்கின்றன.

வயது வரம்பு; 18 முதல் 36 வரை

சம்பளம்; ரூ. 18 ஆயிரம் முதல்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500

பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினருக்கு ரூ.250 கட்டணம்

விண்ணப்பிக்க கடைசி தேதி; பிப்.22

விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/downloads/CEN-08-2024.pdf

என்ற இணைய முகவரியில் உள்நுழைந்து அறிந்து கொள்ளலாம்.

Advertisement