காட்டு யானை தாக்குதல்: வயநாட்டில் நாளை கடையடைப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852176.jpg?width=1000&height=625)
வயநாடு: காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கேரள-தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதிக்கு அருகிலுள்ள நெல் வயலில் நேற்று இரவு காட்டு யானை, மனு,45, என்பவரை தாக்கி கொன்றது. அவரது உடல் யானை தாக்கிய காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக வனவிலங்குகள் பிரச்னை நீடித்து வருவதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், நாளை கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
காட்டு விலங்குகளிடமிருந்து விவசாயிகளை காப்பாற்ற வனத்துறை தவறியதற்கு கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்.ஆர்.எப்., மாவட்ட தலைவர் ஜார்ஜ் கூறியதாவது:
அனைத்து கேரள கத்தோலிக்க காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கடையடைப்புக்கு தங்களின் ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளது.
நாங்கள் யாரையும் சாலையிலிருந்து விலகி இருக்க கட்டாயப்படுத்த மாட்டோம். ஆனால் விவசாய சமூகத்துடன் ஒற்றுமையுடன் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வனவிலங்கு தாக்குதலால் பிப்ரவரி 2023ல் புல்ப்பள்ளி அருகே பக்கத்தைச் சேர்ந்த வி.பி., பால் உட்பட மூன்று பேரின் உயிரைப் பறித்தன. இந்த ஆண்டு, மாவட்டத்தில் இதுவரை இரண்டு பேர் வனவிலங்கு தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
இனியும் இதுபோன்ற சம்பவம் நடப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
![சிட்டுக்குருவி சிட்டுக்குருவி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![GoK GoK](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
-
சாகும் வரை சிறை தண்டனை;பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பு
-
இந்திய இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை; கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு!
-
பொய் சொல்லி அரசியல்: அமைச்சர் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி
-
எஸ்.பி.பி., சாலை வழிகாட்டி பலகை திறப்பு
-
சிவன்மலையில் தைப்பூச தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் இழுத்தனர்