பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ., மாணவர்கள் மாவட்ட விளையாட்டில் 'சாம்பியன்'
பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ., மாணவர்கள் மாவட்ட விளையாட்டில் 'சாம்பியன்'
ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்ட அளவில், தனியார் ஐ.டி.ஐ.,க்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை ஐ.டி.ஐ., மாணவர்கள், 100 மீ., 200 மீ., 1,500 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வாலிபால், கால்பந்து போன்ற போட்டிகளில் முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமார், செயலாளர் மலர், இயக்குனர் சுதாகரன், ஐ.டி.ஐ., முதல்வர் பாபு, விளையாட்டுத்துறை பொறுப்பு ஆசிரியர்கள் அப்சர் ஜான், நந்திகேஷ் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement