சிவகங்கை மாவட்டத்தில் தைப்பூசம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையாகவும், காவடி, பால்குடம் எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை குன்றக்குடி சண்முகநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காரைக்குடி தேவகோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், பால்குடம் எடுத்தும் சண்முகநாத பெருமானுக்கு செலுத்தினர். விடுமுறை நாளான நேற்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை



மானாமதுரை வழி விடு முருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அதி காலை சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனைக்கு பின் வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது.வெள்ளிக்கு றிச்சி,கால்பிரபு, இடைக்காட்டூர், ஆனந்தவல்லி அம்மன் கோயில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

பெரும்பச்சேரி வேல்முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு விரதம் இருந்து வந்த பக்தர்கள் நேற்று அதிகாலை வைகை ஆற்றுக்குச் சென்று பால்குடம் காவடி எடுத்து வந்து வேல்முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.

Advertisement