போலீஸ் செய்தி

விபத்தில் மாணவன் பலி சத்திரப்பட்டி

சத்திரப்பட்டி அடுத்த பழைய சென்னாகுளத்தை சேர்ந்த பாண்டிசுரேஷ் மகன் பாண்டியராஜ் 15, பி.ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர். பிப். 2ல் அவரது தெருவில் சடங்கு விழாவிற்கு சென்றவர் உறவினரின் டூவீலரை எடுத்துக் கொண்டு அட்டை மில் முக்கு ரோடு அருகே வேகமாக சென்று தடுமாறி கீழே விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் பலியானார். கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement