பள்ளி ஆண்டு விழா

திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.சி பள்ளி ஆண்டு விழா நடந்தது.

கல்விக் குழுமத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். தாளாளர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் முன்னிலை வகித்தார். முதல்வர் அர்ஷியா பாத்திமா வரவேற்றார். சிவகங்கை டி.ஆர்.ஓ. செல்வசுரபி பங்கேற்றார். காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் முருகேசன் பங்கேற்றார். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பொறுப்பாளர் விவியன் ஜெய்சன் ஆண்டறிக்கை வாசித்தார்.

Advertisement